சிறிலங்கா விரையவுள்ள அமெரிக்காவின் உயர் இராஜதந்திரிகள் இருவர்!
visit
sri lanka
us
diplomats
By Thavathevan
அமெரிக்காவின் உயர் இராஜதந்திரிகள் இருவர் இந்த மாதம் சிறிலங்காவிற்கு வருகைதர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலன்ட் மற்றும் துணை இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ ஆகியோரே வருகை தரவுள்ளனர்.
அதன்படி எதிர்வரும் 22 ஆம் திகதி குறித்த அதிகாரிகள் வருகை தந்து அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரைச் சந்திக்கவுள்ளனர்.
குறித்த சந்திப்பின் போது மனித உரிமை விவகாரங்கள், பொறுப்புக் கூறுதல் மற்றும் முதலீடுகள் என்பன குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி