மத்திய வங்கி ஆளுநரின் யோசனைக்கு இதுவரையில் பதில் வழங்காத நிதி அமைச்சர்
Basil Rajapaksa
US Dollar
Vehicles
SriLanka
Ajith Nivat Cabral
Central Bank of SriLanka
By Chanakyan
இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமெரிக்க டொலர்களை செலுத்தி அமெரிக்க டொலரில் வரி செலுத்துமாறு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் (Ajith Nivat Cabral) முன்வைத்த யோசனைக்கு நிதி அமைச்சு இதுவரை பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான பிரேரணை நிதியமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கும் மேலதிக காலம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள வாகன இறக்குமதி நெருக்கடிக்கும், டொலர் பிரச்சினைக்கும் ஒரே நேரத்தில் தீர்வு காண முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
