வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு அதிகரிப்பு
வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்
இன்றைய நாளுக்கான வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் சிறிதளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக குறிப்படப்பட்டுள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 368.89 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 357.93 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
ரூபாவின் மதிப்பு அதிகரிப்பு

இதேவேளை, யூரோவின் பெறுமதிக்கு எதிராக ரூபாவின் மதிப்பில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் ரூபாவின் மதிப்பு அதிகரித்துள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 370.53 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 355.29 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் விற்பனை பெறுமதி 433.02 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 416.05 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.