காசா பதற்றத்திற்கு மத்தியில் இஸ்ரேலுக்குள் நுழைந்த அமெரிக்க பிரதிநிதி
அமெரிக்க (America) இராணுவத்தின் மத்திய கட்டளையின் தலைவர் மைக்கேல் குரில்லா (Michael Guerrilla) இந்த வாரம் இரண்டாவது முறையாக இஸ்ரேலுக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலின் (Israel) தாக்குதல் இலக்கானது ஹிஸ்புல்லா (Hezbollah) பக்கம் திரும்பியுள்ள நிலையில் குறித்த விஜயமானது, சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இஸ்ரேலில் நேற்று (07) தரையிறங்கிய அமெரிக்க பிரதிநிதியை இஸ்ரேல் இராணுவத்தின் பொதுப் பணியாளர்களின் தலைவர் ஹெர்சி ஹலேவியை (Herzey Halevi) பிராந்திய பாதுகாப்பு குறித்த சூழ்நிலை மதிப்பீட்டிற்காக சந்தித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய கட்டளை
அத்தோடு, இஸ்ரேலிய விமானப்படையின் கட்டளை அதிகாரியான தோமர் பாரையும் (Tomer Bar) சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Commander of @CENTCOM , General Michael Erik Kurilla, landed in Israel yesterday for his second visit this week, as the official guest of the Chief of the General Staff, LTG Herzi Halevi.
— Israel Defense Forces (@IDF) August 9, 2024
The commanders held a situational assessment on security and strategic issues, as well…
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இஸ்ரேல் இராணுவம்,
"பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் இரு இராணுவங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கான அர்ப்பணிப்புடன் அமெரிக்க ஆயுதப் படைகளுடன் அதன் உறவைத் தொடர்ந்து ஆழப்படுத்தும்" என தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |