செங்கடலில் மீண்டும் பதற்றம்..! அமெரிக்க போர்க்கப்பலை குறிவைத்து தாக்கிய ஹவுதி
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் நாட்டில் இருந்து அமெரிக்க போர்க்கப்பலை குறிவைத்து ஏவிய நான்கு ஆளில்லா விமானங்களையும் அமெரிக்க படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
குறித்த தாக்குதலானது நேற்று(28) இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகின்ற நிலையில் செங்கடல் பகுதியில் இஸ்ரேல் நோக்கி செல்லும் சரக்கு கப்பல்களை அவர்கள் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
பதற்றமான சூழ்நிலை
இதனால் செங்கடல் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதுடன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை முறியடிக்க செங்கடல் பகுதியில் அமெரிக்கா தனது கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளது.
மேலும் அந்நாட்டு கடற்படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் நாட்டிலிருந்து ஆளில்லாத நான்கு டிரோன்களை அமெரிக்க போர்க்கப்பலை குறி வைத்து ஏவியுள்ளனர்.
அமெரிக்க படையினர்
உஷாரான அமெரிக்க படையினர் அந்த டிரோன்களை சுட்டு வீழ்த்தி அழித்ததுடன் இந்த டிரோன்கள் வீசியதில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாலஸ்தீனத்தின் காசாவில் இஸ்ரேல் படை தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிப்பதற்காக நடந்து வரும் இந்த சண்டையில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்.
இவ்வாறு குறித்த தாக்குதலில் இறந்தவர்களில் அப்பாவி குழந்தைகள் மற்றும் பெண்கள் தான் அதிகம் ஆனாலும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |