சீ.ஐ.ஏ யின் திடுக்கிடும் மர்ம கருவி!
கழுவேறத் துணிந்த நீலி கண்மை எரிகிறது என்றாளாம் என்ற பழமொழியைப் போல உள்ளூரில் முன்னர் தாமே எதிர்த்த சிறிலங்காவின் நிகழ்நிலை காப்புச் சட்டம் என்ற ஊடக அடக்குமுறைக்குள் புகுந்துகொண்டு தமிழ் ஊடகங்கள் மீது தமது அட்டைக்கத்திச் சுழற்றல் வழக்குகளைத் தொடுக்கும் தமிழ்த் தேசிய அரிதாரப் பிரகிருதிகளையும் கர்மா தாக்குவது போல இவர்களும் படுமோசமான பொய்களையும் தூஷிப்புகளையும் செய்வதாக அநுர தரப்பின் தமிழ் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.
இதன் பின்னர், சிறிலங்காவின் நாடாளுமன்றச் சபாநாயகரும் இதே பிரகிருதியை எச்சரித்துக்கொண்டார்.
அரசியல்வாதிகளுக்கென்ன, அவர்கள் உள்ளூரிலும் சரி, உலக அரங்கிலும் சரி ஆயிரம் கதைகளைச் சொல்வார்கள் பொய்களையும் கயிறாகத் திரிப்பார்கள்.
இது உலக அரங்கின் மத்திய கிழக்குக் கொதிநிலைக்கும் பொருந்தும்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் நாளை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடக்கவுள்ள முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகளுக்காக இரண்டு நாட்களுக்கு அந்த நகரவாசிகளுக்குச் சிறப்பு விடுமுறை விடப்பட்டு நகரெங்கும் துருப்புகளும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், ஈரானுக்கு உள்ளே அமெரிக்கா அண்மையில் நடத்திய அதிரடி மீட்பு நடவடிக்கையில் உலகில் வேறு எந்த உளவுத்துறை அமைப்பிடமும் இல்லாத நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கோஸ்ட் மர்மர் (Ghost Murmur) கருவியைப் பயன்படுத்தியமை வெளிவந்துள்ள நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்தி வருகிறது செய்திவீச்சு…
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |