மீண்டும் அதிகரிக்கும் பதற்றம்...! அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தை சுமார் 15 மணித்தியாலங்கள் நீடித்த போதிலும், எந்தத் தீர்வும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்துள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான நிலைப்பாடுகளில் பெரும் வேறுபாடுகள் இருந்ததால், இரு தரப்பினரும் ஒரு சமாதான உடன்படிக்கைக்கு வருவது மிகவும் கடினம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பேச்சுவார்த்தை குறித்து கருத்து தெரிவித்த முகமது பாகர் காலிபாஃப், “அமெரிக்காவுடன் நடத்தப்படும் அமைதி பேச்சுவார்த்தைகள் பெரும்பாலும் தோல்வியிலும், வாக்குறுதி மீறல்களிலும் முடிவடைகின்றன. நல்லெண்ணம் இருந்தாலும், நம்பிக்கை இல்லை” என தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை தோல்வி
மற்றுபுறம் ஜே. டி. வான்ஸ் ஊடகவியலாளர்களிடம் தெரிவிக்கையில், “இரு தரப்பும் விரிவான விவாதங்களில் ஈடுபட்டது நல்ல விஷயம். ஆனால், எந்த ஒப்பந்தமும் எட்டப்படாதது வருத்தமளிக்கிறது. இது அமெரிக்காவுக்கு மட்டும் அல்ல, ஈரானுக்கும் பாதகமானது” என்றார்.

மேலும், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கவோ, அதற்கான திறனை வைத்திருக்கவோ கூடாது என்பதே அமெரிக்காவின் முக்கிய நிபந்தனை எனவும், அதில் உறுதி கிடைக்காததே பேச்சுவார்த்தை தோல்விக்கான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த பேச்சுவார்த்தை, 06 வாரங்களாக நீடித்து வரும் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக கருதப்பட்ட நிலையில், தற்போது அது தோல்வியில் முடிவடைந்துள்ளது.
இதனால், மேற்காசிய பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |