கவலைக்கிடமான நிலையில் அலி கமேனி! ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை
மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கைகளை அதிகரித்து வரும் நிலையில், ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி மிகவும் கவலைப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் பேசிய ட்ரம்ப், ஈரான் தற்போது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
எனினும், வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தைகள் சீர்குலையும் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய இராணுவ நடவடிக்கை
பேச்சுவார்த்தை இடம் மற்றும் நடைமுறையில் மாற்றம் செய்ய அமெரிக்கா மறுத்ததே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது.இதுகுறித்து வெள்ளை மாளிகை உடனடி விளக்கம் அளிக்கவில்லை.

Image Credit: NBC News
மேலும், ஈரான் பகுதியில் அமெரிக்கா விமான தாங்கிக் கப்பலை அனுப்பியுள்ள நிலையில், புதிய இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |