அமெரிக்க இராணுவத்தின் மறைமுக எச்சரிக்கை..!
ஈரானுடனான பதட்டங்கள் அதன் அணுசக்தித் திட்டத்தில் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க இராணுவதின் செயற்பாடானது உலக நாடுகளை பெரும் அச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
இம்மாதம் பூமியில் ஆழமாக ஊடுருவி யுரேனியத்தைச் செறிவூட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் நிலத்தடி வசதிகளை அழிக்க வடிவமைக்கப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டின் படங்களை அமெரிக்கா வெளியிட்டது.
இதற்கமைய அமெரிக்க விமானப்படை “மாசிவ் ஆர்ட்னன்ஸ் பெனட்ரேட்டர்” என்று அழைக்கப்படும் GBU-57 என்ற ஆயுதத்தின் அரிய படங்களை வெளியிட்டது.
அணுகுண்டு சோதனை
அமெரிக்க இராணுவத்தின் நிலத்தடி பதுங்கு குழிகளை அகற்றுவதற்கான கடைசி ஆயுதமாக கருதப்படும் GBU-57 ஆயுதமானது யுத்த நடவடிக்கைகளுக்கு அப்பால் இருக்கும் அணுசக்தி நிலையத்தை நிர்மாணிப்பதில் ஈரான் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், இந்தப் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரான் தனது அணுசக்தி தளங்களை நிலத்தடியில் உருவாக்குவதன் மூலம் அதை வலிமைப்படுத்துவது பற்றிய கவலைகள் அதிகரித்ததால், அமெரிக்கா 2000மாம் ஆண்டுகளில் பாரிய ஆயுத ஊடுருவல் கருவியை உருவாக்க ஆரம்பித்தது.
மிசோரியில் உள்ள வைட்மேன் விமானப்படை தளத்திற்கான முகநூல் பக்கத்தில் வெடிகுண்டுகளின் படங்களை விமானப்படை வெளியிட்டது.
இந்த தளம் B-2 ஸ்டெல்த் அணுகுண்டு சோதனையாளர்களின் கடற்படைக்கு சொந்தமானது. இது வெடிகுண்டை நிலைநிறுத்தக்கூடிய ஒரே விமானதளமாக கருதப்படுகிறது.
