கஜேந்திரகுமார் கைது - அமெரிக்க செனட்டின் வெளிவிவகார குழு கண்டனம்!
சிறிலங்காவில் இன மத சிறுபான்மையினரை மௌனமாக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்க செனட்டின் வெளிவிவகார குழு கவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் செனட் வெளிவிவகார குழுவின் உத்தியோகப்பூர்வ டுவிட்டரில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுவிக்கப்பட்டதை வரவேற்கும் அதேவேளை அவர் கைது செய்யப்பட்டமை, அச்சுறுத்தப்பட்டமை துன்புறுத்தப்பட்டமை குறித்து தான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக செனட் குழுவின் தலைவர் செனட்டர் மெனெட்டெஸ் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மையினர்
சிறிலங்காவில் படையினர், புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல்கள் துன்புறுத்தல்கள் குறித்தும், சிறுபான்மையினரை மௌனமாக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து தான் கரிசனை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
While I welcome the release of MP @GGPonnambalam, I’m deeply concerned by his arrest, intimidation and harassment. I’m also concerned about ongoing reports of intimidation and harassment by Sri Lankan security and intelligence to try to silence ethnic and religious minorities. https://t.co/R4qRC34ste
— Senate Foreign Relations Committee (@SFRCdems) June 9, 2023
