ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ இல்லங்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள முடிவு
ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான கோரிக்கைகள் பல அரசாங்க நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (செப். 16) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவற்றில் நூற்றுக்கணக்கான மில்லியன் ரூபாய்களில் வாடகை செலுத்துவதன் மூலம் பொதுமக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் பல அரச நிறுவனங்கள் உள்ளதாகவும், ஆனால் இந்த விடயத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் திட்டம்
இந்த உத்தியோகபூர்வ இல்லங்கள் எதிர்காலத்தில் அதிகபட்ச பொருளாதார உற்பத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் என்றும், இது திறைசேரிக்கு பயனளிக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
அத்துடன், குறித்த உத்தியோகபூர்வ இல்லங்கள் ஒப்படைக்கப்பட உள்ள இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிடப்பட்ட வாடகைக்கு இணையான வருமானத்தை ஈட்ட அரசாங்கத்திடம் திட்டம் உள்ளதா என்று அமைச்சரவை ஊடக சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்தக் கருத்துக்களை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
