அமெரிக்க ஜனாதிபதிக்கே விதிக்கப்பட்ட இறுக்கமான கட்டுப்பாடுகள்
அமெரிக்க(us) ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர் நாட்டின் நலன் சார்ந்து என்னதான் கட்டுப்பாடுகளை விதித்தாலும் அவருக்கெனவும் கட்டுப்பாடுகள் உள்ளன என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி அமெரிக்க ஜனாதிபதிக்கு கடும் இறுக்கமான ஏழு கட்டுப்பாடுகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. அவ்வாறு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு என்ன பார்க்கலாம்.
வாகனம் செலுத்த தடை
அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருப்பவர், முன்னாள் ஜனாதிபதிகள், துணை ஜனாதிபதி என எவரும் , கார் ஓட்டுவதற்கு அனுமதி கிடையாது. ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி ஆனாலே, அவரது வாழ்நாள் முழுக்க அவர் வீதிகளில் கார் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. ஆனால், அவர்களது பங்களாக்கள், விடுமுறைக் கொண்டாட்டங்களின்போது தங்கும் இடங்களுக்குள் வேண்டுமானால் ஆசை தீர கார் ஓட்டலாம்.
அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கும் ஒருவர், பாதுகாப்புக் காரணங்களுக்காக, சொந்தமாக கைபேசி உள்ளிட்ட டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. கடைசியாக ஒபாமா ஜனாதிபதியாக இருந்த போது, ஆலோசகர்களின் அறிவுறுத்தலை தாண்டி, பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் கொண்ட ஐபேட் வைத்திருந்தார். ஜோ பைடன் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட அப்பிள் கடிகாரம் அணிந்திருந்தார். முன்பு டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது, குறுகிய காலத்துக்கு கைபேசிகளை மாற்றி வந்தார்.
ஜனாதிபதியாக இருப்பவரின் பிள்ளைகள் அல்லது பேரக் குழந்தைகளின் பாடசாலைகளில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது. அவ்வாறு பங்கேற்பதாக இருந்தால் பள்ளிகளுக்குக் கூடுதல் பாதுகாப்புப் போடப்பட வேண்டும் என்ற பாதுகாப்புக் காரணமே இதற்குக் காரணம்.
சமூக ஊடகங்கள் பக்கம் வரக்கூடாது
சமூக ஊடகங்கள் மூலம், அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால், ஒரு அமெரிக்க ஜனாதிபதியாக இருப்பவர் சமூக ஊடகங்கள் பக்கமே வரக்கூடாது.
அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கும் ஒருவர், அமெரிக்க ஏர்லைன்ஸில் பயணிக்க முடியாது. அதற்கு அவரது ரகசிய பாதுகாப்பு சேவை அமைப்பு நிச்சயம் ஒப்புக்கொள்ளாது. அமெரிக்க ஜனாதிபதிகளுக்கான தனி விமானத்தில் மட்டுமே ஜனாதிபதி பயணிக்க முடியும்.
ஜன்னல் கதவுகளை திறக்கக் கூடாது
எந்த ஆவணங்களையும் குப்பை என்று ஒரு அமெரிக்க ஜனாதிபதியால் தூக்கி எறிய முடியாது. தேவையற்ற மின்னஞ்சல்களை அழிக்க முடியாது. ஒவ்வொரு துண்டுச் சீட்டும் கூட வெள்ளை மாளிகை ஊழியர்களின் ஆய்வுக்கு உள்பட்ட பிறகே அவர்களால்தான் அது குப்பையில் போட வேண்டியது என்று உறுதி செய்யப்படும்.
வெளியே குளுகுளு என தென்றல் காற்று வீசினாலும் கூட, ஒரு அமெரிக்க ஜனாதிபதியாக இருப்பவர், தனது அறையின் ஜன்னல் கதவுகளை திறக்கக் கூடாது. அமெரிக்க ஜனாதிபதி மட்டுமல்ல, வெள்ளை மாளிகையின் எந்த ஜன்னல் கதவுகளும் திறக்கப்படக் கூடாது. யாரும் திறக்கவும் கூடாது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |