ஜனாதிபதி ட்ரம்ப் தோற்றத்தில் எருமை : ஈர்க்கப்படும் மக்களின் கவனம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போன்று தோற்றமளிக்கும் ஒரு அரிய வகை எருமை மாடு, இணையதளத்தில் வேகமாக பரவி, மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவுக்கு அருகில் உள்ள நாராயணகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு பண்ணையில், அல்பினோ என்ற வெளிர் நிறமுடைய எருமை மாடு ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது.
டொனால்ட் ட்ரம்ப் பெயர்
சுமார் 3.5 வயது கொண்ட இந்த எருமை 700 கிலோ எடை கொண்டது. இந்த எருமையின் தலையில் உள்ள பொன்நிற முடியும், அதன் முக அமைப்பும் அச்சு அசலாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் தலைமுடி அலங்காரம் மற்றும் அவரின் தோற்றத்தை நினைவூட்டுவதால், இதற்கு டொனால்ட் ட்ரம்ப் என பெயரிடப்பட்டுள்ளது.

பெஞ்சமின் நெதன்யாகுவின் பெயர்
இதே பண்ணையில் 750 கிலோ எடை கொண்ட மற்றொரு அல்பினோ எருமைக்கு, அதன் ஆக்ரோஷமான குணம் மற்றும் கோபமான நடத்தை காரணமாக மேற்காசிய நாடான இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதன் கண் மற்றும் முடி நெதன்யாகுவை ஒத்து இருப்பதால், இப்பெயர் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |