அமெரிக்காவில் 10,000 இற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து...! அவசரநிலை பிரகடனம்
அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்புயல் காரணமாக 10,000 இற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (25-01-2026) இச்சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த இயற்கைச் சீற்றத்தினால் நியூ மெக்சிகோ தொடங்கி நியூ இங்கிலாந்து வரையிலான பகுதிகளில் வசிக்கும் சுமார் 14 கோடி மக்கள் மற்றும் 20 மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மீட்பு நடவடிக்கை
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஈஸ்ட் டெக்சாஸ் தொடங்கி நார்த் கரோலினா வரை பனிப்புயல் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக 10,000 இற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் 8,000 இற்கும் அதிகமான விமான சேவைகள் தாமதமாக இயக்கப்பட்டதாக ஃப்ளைட்-அவேர் தளம் தெரிவித்துள்ளது.

மேலும், பல பகுதிகளில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதால் 8.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், டென்னிசி, மிசிசிப்பி, கென்டக்கி, ஜார்ஜியா, விர்ஜீனியா மற்றும் அலபாமா ஆகிய மாகாணங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், இருபது மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களை மற்றும் மீட்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அதிகாரிகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |