அமெரிக்க குழு இலங்கைக்குள் நுழைவு
உயர்மட்ட தூதுக்குழு இலங்கையை வந்தடைவு
அமெரிக்க திறைசேரி திணைக்களம் மற்றும் இராஜாங்கத் திணைக்களம் ஆகியவற்றின் உயர்மட்ட தூதுக்குழு இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளது.
இன்று அதிகாலை 2.20 அளவில் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அமெரிக்க தூதுக்குழுவினர் எதிர்வரும் 29 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கிருக்கவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
இலங்கையர்களுக்கு அமெரிக்க உதவி
ஆசியாவிற்கான பிரதி உதவித் திறைசேரி செயலாளர் றொபர்ட் கப்ரொத், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான பிரதி உதவி இராஜாங்க செயலாளரான தூதுவர் கெல்லி கெய்டர்லிங் ஆகியோர் இந்தத் தூதுக்குழுவில் உள்ளடங்குகின்றனர்.
அவர்கள் பல்வேறு அரசியல் பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளனர்.
இலங்கையர்களுக்கு அமெரிக்கா உதவி செய்வதற்கான, மிகவும் செயற்றிறன் வாய்ந்த வழிமுறைகள் தொடர்பில் தமது அனைத்து சந்திப்புகளிலும் அவர்கள் ஆராய்வார்கள் என அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
