அமெரிக்காவின் ஜனாதிபதியாகவுள்ள டொனால்ட் ட்ரம்ப்! நிபுணர்களின் நிலைப்பாடு
அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) பதவியேற்றதும் உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அமெரிக்கா வெளியேறும் என்று நிபுணர்கள் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டொனால்ட் ட்ரம்ப் தனது முன்னைய பதவிக்காலத்தின் போது 2020ஆம் ஆண்டு அமெரிக்காவை உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து விலக்கிக்கொண்டார்.
அந்த வகையில், ட்ரம்ப் தற்போது பதவியேற்ற அன்றைய தினமே அமெரிக்காவை உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து விலக்கிக்கொள்வதற்கான நடவடிக்கைகளில் ட்ரம்பின் ஜனாதிபதி மாற்றகுழுவினர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
உலக சுகாதார ஸ்தாபனம்
பதவியேற்ற அன்றே அல்லது அடுத்த சில நாட்களில் ட்ரம்ப் அமெரிக்காவை உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து விலக்கிக்கொள்ள திட்டமிட்டுள்ளார் என நம்பகதன்மை மிக்கவர்கள் தெரிவித்துள்ளனர் என்று வோசிங்டனின் ஜோர்ஜ்டவுன் பல்கலைகழக பேராசிரியர் லோரன்ஸ் கொஸ்டின் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் சுகாதார அமைப்பினை ட்ரம்ப் நீண்டகாலமாக விமர்சித்து வருகின்ற நிலையிலேயே அமெரிக்காவை அந்த அமைப்பிலிருந்து விலக்கிக்கொள்வதற்கு அவர் தீர்மானித்துள்ளார் என கூறப்படுகின்றது.
ட்ரம்பின் இந்த நடவடிக்கை அமெரிக்காவின் உலகளாவிய சுகாதார கொள்கையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதுடன் தொற்றுநோய்களிற்கு எதிரான சர்வதேச சமூகத்தின் போராட்டத்திலிருந்து அமெரிக்காவை தனிமைப்படுத்தும் என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், உலக சுகாதார ஸ்தாபனத்தை கடுமையாக விமர்சிப்பவர்களையே ட்ரம்ப் உயர் பதவிக்கு நியமித்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அமெரிக்காவின் சுகாதார மற்றும் மனித சேவைகள் திணைக்களத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ரொபேர்ட் கென்னடி தடுப்பூசிகள் குறித்து சந்தேகங்களை வெளியிட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |