உக்ரைனுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்கும் அமெரிக்கா
உக்ரைனுக்கு உதவியாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியான உதவிகளை செய்து வருகின்றன.
அந்த வகையில், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைனுக்கு அமெரிக்கா பல ஆயிரம் கோடி மதிப்பிலான இராணுவ உதவிகளை வழங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது உக்ரைனுக்கு மேலும் 275 மில்லியன் டொலர்கள் இராணுவ ஆயுத உதவியை அமெரிக்கா அனுப்பியுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் தொடங்கிய போர் 8 மாதங்களை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது.
ஏவுகணை ஆயுதம்

இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சின்னபின்னமாகியுள்ளன. பல நகரங்களை ரஷ்யா தன்வசப்படுத்தியுள்ளது. ஆனாலும் உக்ரைன் இராணுவம் துணிச்சலுடன் தொடர்ந்து ரஷ்ய படைகளை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றன.
ஏவுகணை ஆயுதங்கள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் இராணுவ ஆயுத உதவியின் கீழ் உக்ரைனுக்கு வழங்கப்படுகிறது. ரஷியாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவியாக இதுவரை 19.3 பில்லியன் டொலர் மதிப்பிலான அதிகமான இராணுவ உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.