டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய் : விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்
Dollar to Sri Lankan Rupee
Sri Lanka
Economy of Sri Lanka
Nalin Fernando
By Sathangani
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த சில மாதங்களாக படிப்படியாக வலுவடைந்து வருவதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட வேண்டியது அவசியம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்தமையின் பலன், மார்ச் முதல் வாரத்தில் இருந்து பொதுமக்களுக்கு கிடைக்கும் என தான் நம்புவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பண்டிகைக் காலத்தில்
இதேவேளை எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடின்றி அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
எனவே இந்த விடயம் தொடர்பில் இறக்குமதியாளர்களுடன் தொடர்ச்சியாகக் கலந்துரையாடியுள்ளதாகவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி