மகிந்தவிற்கு தலைமைத்துவம் வழங்க முடியாது - வாசுதேவ நாணயக்கார
Colombo
Parliament of Sri Lanka
Mahinda Rajapaksa
Vasudeva Nanayakkara
By Beulah
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச அரசியலில் தொடர்ந்தும் நடுநிலைப் பாதைக்கு தலைமைத்துவம் வழங்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
குருவிட்ட பகுதியில் நேற்று இடம்பெற்ற உத்தர லங்கா சபாயகவின் சம்மேளனத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதாவது மகிந்த ராஜபக்ச தற்போது ரணில் விக்ரமசிங்கவின் பக்கத்தில் இருக்கின்றார். எனவே மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் நடுநிலைப் பாதையில் கொடியைத் தூக்கிக் கொண்டு பயணிக்க முடியாது.
முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஏகாதிபத்தியவாதிகளின் அழுத்தத்திற்கும் அவர்களுக்கு எதிராக உருவாகியுள்ள ஆசியாவின் பலத்திற்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
எனவே நடுநிலைப் பாதையில் பயணிப்பவர்கள் எங்கே செல்வது என தீர்மானம் எடுக்க வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
