பாடப்புத்தகங்கள் மீதான வற் வரி நீக்கம் : அநுர அதிரடி அறிவிப்பு
இலங்கையில் பாடப்புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரியை (VAT) நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நொச்சியாகம பகுதியில் நேற்று (13) நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வரும்நிலையில் தான் அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்கிறோம்.
வரவு - செலவுத் திட்டம்
பொருளாதார ரீதியில் ஸ்திரமடைந்துள்ளோம். இருப்பினும் பொருளாதார சுயாதீனத்தை இன்னும் அடையவில்லை. பொருளாதார சுயாதீனத்தை அடைவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதாரத்துறை ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கும், மக்களுக்கான சேவை வழங்கலையும் வினைத்திறனாக்க அடுத்தாண்டு வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்படும்.
பாடப்புத்தகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பெறுமதிசேர் வரியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 2027 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் அதற்குரிய திட்டங்கள் முன்வைக்கப்படும்“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..! 23 மணி நேரம் முன்