வற்றாப்பளை ஆலயத்தில் மெய்சிலிர்க்க வைத்த காட்சி
வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் பல இலட்சம் பக்தர்களுடன் சிறப்பாக இடம்பெற்றறது.
முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலய பொங்கல் நிகழ்வு நேற்று (05) அதிகாலை நிறைவடைந்ததும், அங்கிருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் ஆரம்பிக்கப்பட்டது.
அதிகளவான பக்தர்கள்
காலை பூசையினை தொடர்ந்து மாலை வரை அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டு தூக்கு காவடி ,பறவைக் காவடி, பாற்செம்பு , தீச்சட்டி உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை மேற்கொண்டதோடு அர்ச்சனைகளும் இடம்பெற்றது.
கடந்த காலங்களை விட இம்முறை இலங்கையில் மாத்திரமின்றி புலம்பெயர் நாடுகளில் இருந்தும் மிக அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
அதனைத் தொடந்து நேற்று (05) இரவு 11 மணியளவில் மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு பாரம்பரிய முறைப்படி வளர்ந்து நேர்ந்து பொங்கல் சிறப்பாக இடம்பெற்று இன்று (6) அதிகாலை பொங்கல் நிகழ்வுகள் நிறைவடைந்தது.
நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் பெரும் திரளான மக்கள் உப்புநீரில் விளக்கெரியும் எம்பிராட்டியின் அருளை பெறுவதற்காக குவிந்து வந்தனர்.
பாற்குடங்கள், ஆட்டக்காவடிகள் , பறவைக்காவடிகள் என நேர்த்திக்கடன்களை அடியவர்கள் நிறைவேற்றிய காட்சி பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.