வவுனியா தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
வவுனியா, உக்குளாங்குளம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ச.சுகந்தன் என்பரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த குழுவொன்று வாள்வெட்டு தாக்குதலில் ஈடுபட்டதுடன் குறித்த வீட்டை பெற்றோல் ஊற்றி எரியூட்டியிருந்தனர்.
மேலதிக விசாரணைகள்

இச்சம்பவத்தின் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு இரண்டு மாத கர்ப்பிணியான 21 வயதான பாத்திமா என்ற இளம் குடும்ப பெண் சம்பவ இடத்திலேயே மரணமடைந்திருந்ததுடன், 10 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அதில், மரணமடைந்த பெண்ணின் கணவன் பலத்த தீக் காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (26) அதிகாலை அவர் மணமடைந்துள்ளார்.
இச் சம்பவங்கள் தொடர்பில் வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணைனகளை முன்னெடுத்து வருகின்றனர்.