வெடுக்குநாறி மலையில் அரங்கேறிய அராஜகம் - யாழில் போராட்டம் (படங்கள்)
Jaffna
SL Protest
By pavan
கவனயீர்ப்பு போராட்டம்
வெடுக்குநாறி மலையில் பி்ரதிஸ்டை செய்யப்பட்ட ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று பிற்பகல் நல்லூர் - நல்லை ஆதினம் முன்பாக சைவ மகா சபையின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், சைவ மகா சபை பொதுச் செயலாளர் வைத்தியர் பரா.நந்தகுமார், மத குருமார்கள், அரசியல் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி