நாட்டில் மரக்கறி விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்
மரக்கறிகளின் விலைகளில் இன்று (15.6.2025) சனிக்கிழமை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையினை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக தேசிக்காய் மற்றும் இஞ்சி போன்ற மரக்கறிகளின் விலைகள் பன்மடங்கு அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது.
அதன்படி, பேலியகொடை (Peliyagoda) மெனிங் சந்தையில் ஒரு கிலோ கரட் 300 ரூபாவாகவும், ஒரு கிலோ போஞ்சி 500 ரூபாவாகவும், ஒரு கிலோ பீட்ரூட் 450 ரூபாவாகவும், ஒரு கிலோ லீக்ஸ் 500 ரூபாவாகவும், ஒரு கிலோ முட்டைக்கோஸ் 180 ரூபாவாகவும், ஒரு கிலோ தக்காளி 400 ரூபாவாக உள்ளது.
பேலியகொடை மெனிங் சந்தை
ஒரு கிலோ பச்சை மிளகாய் 300 ரூபாவாகவும், ஒரு கிலோ கறி மிளகாய் 450 ரூபாவாகவும், ஒரு கிலோ கத்தரிக்காய் 460 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், ஒரு கிலோ பூசணிக்காய் 140 ரூபாவாகவும், ஒரு கிலோ வெண்டைக்காய் 120 ரூபாவாகவும், ஒரு கிலோ முள்ளங்கி 180 ரூபாவாகவும், ஒரு கிலோ பீர்க்கங்காய் 350 ரூபாவாகவும், ஒரு கிலோ வெங்காயத்தாள் 300 ரூபாவாகவும், ஒரு கிலோ தேசிக்காய் 1,200 ரூபாவாகவும், ஒரு கிலோ இஞ்சி 2,700 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நாராஹென்பிட்டி மரக்கறி சந்தை
இதேவேளை, நாராஹென்பிட்டி மரக்கறி சந்தையில் ஒரு கிலோ கரட் 480 ரூபாவாகவும், ஒரு கிலோ போஞ்சி 700 ரூபாவாகவும், ஒரு கிலோ பீட்ரூட் 680 ரூபாவாகவும், ஒரு கிலோ லீக்ஸ் 700 ரூபாவாகவும், ஒரு கிலோ முட்டைக்கோஸ் 320 ரூபாவாகவும், ஒரு கிலோ தக்காளி 600 ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 400 ரூபாவாகவும், ஒரு கிலோ கறி மிளகாய் 600 ரூபாவாகவும், ஒரு கிலோ கத்தரிக்காய் 600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், ஒரு கிலோ பூசணிக்காய் 200 ரூபாவாகவும், ஒரு கிலோ வெண்டைக்காய் 240 ரூபாவாகவும், ஒரு கிலோ முள்ளங்கி 280 ரூபாவாகவும், ஒரு கிலோ பீர்க்கங்காய் 480 ரூபாவாகவும், ஒரு கிலோ வெங்காயத்தாள் 400 ரூபாவாகவும், ஒரு கிலோ தேசிக்காய் 1,400 ரூபாவாகவும், ஒரு கிலோ இஞ்சி 3,700 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |