நுவரெலியாவில் உச்சம் தொட்டுள்ள மரக்கறி விலைகள்
நுவரெலியாவில் (Nuwara Eliya) உற்பத்தி செய்யப்படுகின்ற உயர்தர சமையலுக்கு பயன்படுத்தப்படும் மரக்கறிகளின் விலைகள் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட வைபவங்கள், உல்லாச ஹோட்டல்கள் ஆகியவற்றில் சமைக்க கூடிய கொத்தமல்லி இலை, ஐஸ்பேர்க், சலட் இலை, ப்ரக்கோலி மற்றும் கோலிப்ளவர் போன்ற மரக்கறிகளின் விலையே இவ்வாறு உயர்ந்துள்ளது.
நுவரெலியா (Nuwara Eliya) விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் ஊடாக (02.06.2024) கொள்வனவு மற்றும் விற்பனை செய்யப்படும் மரக்கறிகளுக்கான விலைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
உயர் தர சமையலுக்கு பயன்படுத்தப்படுபவை
அதன்படி நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற முட்டைக் கோஸ் 60 - 80 ரூபா, கரட் 110 -130 ரூபா, லீக்ஸ் 350 - 370 ரூபா, ராபு 80 - 100 ரூபா, இலையுடன் பீட்ரூட் 220 - 240 ரூபா, இலையில்லா பீட்ரூட் 320 - 340 ரூபா, உருளைக் கிழங்கு 210 - 230 ரூபா, உருளை கிழங்கு சிவப்பு 200 - 220 ரூபா, நோக்கோல்100 - 120 ரூபா என விற்பனை, கொள்வனவு விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் உயர் தர சமையலுக்கு பயன்படுத்தப்படும் கொத்தமல்லி இலை கிலோ ஒன்றின் விலை 2300 - 2400 ரூபா, ஐஸ்பேர்க் 3500 - 3600 ரூபா, சலட் இலை1700 - 1800 ரூபா, ப்ரக்கோலி 1500 - 1600 ரூபா, கோலிப்ளவர் 1500 - 1600 ரூபா என்றவாறு விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம்
நுவரெலியா மாவட்டத்தில் நிலவி வரும் காலநிலை மாற்றம் காரணமாக மரக்கறிகளின் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இருந்தபோதிலும் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு நிலவவில்லை என பொருளாதார மத்திய நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாள் ஒன்றுக்கு ஒரு இலட்சத்து 20 ஆயிரம் கிலோவுக்கு குறையாத மரக்கறி வகைகள் கொள்வனவு செய்யப்பட்டு வெளியிடங்களில் உள்ள சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |