இலங்கையில் வாகன விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்
வாகனங்களின் இறக்குமதிக்கு அனுமதி கிடைத்தவுடன் விலைகள் உயரும் போக்கு காணப்படுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேகே தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதியை அனுமதிப்பதாக அரசாங்கம் அடிக்கடி கூறுவது தொடர்பில் சந்தேகம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர்,
வாகனங்கள் இறக்குமதி
வாகனங்கள் இறக்குமதி தொடர்பாக 4 வருடங்களாக காத்திருக்கிறோம். விரைவில் கொண்டு வருவோம் என்கிறார்கள். ஆனால் ஒரு நாள் என்பது ஒரு நேரத்தைக் குறிக்காது. அதனை படிப்படியாக இலகுபடுத்த முடியும் என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதுவரை நாம் வாகனங்களை ஏற்றுமதி செய்யவில்லை. நாங்கள் வாகனங்களை இறக்குமதி செய்யும்போது, அரசாங்கம் 200% வரி விதிக்கிறது.
நாங்கள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுடன் கலந்துரையாடினோம். முதலில் பஸ், லொறி போன்ற வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்றும், பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதத்தைப் பார்த்துவிட்டு, முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அதன் பிறகு, கார்கள் மற்றும் வேன்கள் இறக்குமதி வாய்ப்பைப் பெறும் எனத் தெரிவித்திருந்தார்.
நுகர்வோர் வாகனங்களுக்கு அதிக விலை
இந்நிலையில், அமைச்சர்களுக்குத் தேவையான வாகனங்களைக் கொண்டுவர ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏனெனில் அமைச்சர்கள் சபாநாயகரிடம் வாகனங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
எப்படி இருந்தாலும், வாகனங்களின் தற்போதைய விலை நியாயமானதா? இல்லை? சொல்ல முடியாது. இது வழங்கல் மற்றும் தேவையைப் பொறுத்தது.” அதிலிருந்து, நுகர்வோர் வாகனங்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருந்தது.
வாகனங்களை இறக்குமதி செய்ய ஆரம்பித்தாலும் பெரிய அளவில் விலை குறைப்பை எதிர்பார்க்க முடியாது. அதேசமயம், வாகனங்களின் விலை உயருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |