மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் முதியவர் பலி
Batticaloa
Eastern Province
By Dharu
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் களுதாவளை பொது நூலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (21.10.2025) இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர் கூறியுள்ளனர்.
குறித்த முதியவர் வீதியைக் குறுக்கீடு செய்த வேளை கல்முனை பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த லொறி ஒன்றின் மீது மோதியதாலேயே இவ்விபத்துச் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறையினர் விசாரணை
இவ்விபத்துச் சம்பவத்தில் குறித்த முதியவர் இஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், இதில் உயிரிழந்தவர் அப்பகுதியில் வீதியில் நடமாடித் திரிபவர் என அப்பகுதியிலுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சடலத்தை காவல்துறையினர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்