இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்
நாட்டில் மீண்டுமொரு பொருளாதார நெருக்கடி ஏற்படாத வகையிலேயே இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், அரசு 3,000 க்கும் மேற்பட்ட HS குறியீடு இறக்குமதிகளை நிறுத்த வேண்டியிருந்தது, இதன் மூலம் மட்டுமே நாங்கள் இருப்புகளை பாதுகாத்தோம் மற்றும் இருப்புக்களை பூஜ்ஜியத்திலிருந்து 3 ADOB ஆக அதிகரித்தோம்.
ஒரு நாடு நீண்ட காலத்திற்கு இறக்குமதியை தடை செய்ய முடியாது. ஆகவே கட்டுப்பாடுகள் சிறிது சிறிதாக திறக்கப்பட வேண்டும்.
இறக்குமதித் தடை

நாம் நாட்டின் பொருளாதாரத்தை ஒரு வளமான பொருளாதாரமாக விரிவுபடுத்துகிறோம், சர்வதேச வர்த்தகத்திற்கு தேவையான வசதிகளை வழங்குவது என்பது இதில் மிக முக்கியமான விடயம்.
எந்தவொரு பொருளின் மீதான இறக்குமதித் தடையை நீக்கும் போது நாங்கள் எல்லா பக்கங்களையும் ஆராய்ந்து பார்க்கிறோம்.
அதன் தேவை, அதன் மாற்றீடுகள் போன்ற ஒவ்வொரு அம்சத்தையும் ஆராய்ந்து தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.