தையிட்டி போராட்டத்தில் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள்! வலுக்கும் கண்டனம்
தையிட்டி சட்டபூர்வமற்ற விகாரைக்கு முன் இடம்பெற்ற போராட்டத்தில் நல்லூர் சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் மிக மிலேச்சுதமான முறையில் கைது செய்யப்பட்டதற்கு சைவ மகா சபை கண்டனம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
“தையிட்டி சட்டபூர்வமற்ற விகாரை விவகாரத்திற்காக இன்று சாத்வீகமான முறையில் போராட்டம் நடைபெற்றபோது சைவ சமயத்தலைவர்களில் ஒருவரான நல்லூர் சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் மிக மிலேச்சுதமான முறையில் கைது செய்யப்பட்டதை சைவ மகா சபை வன்மையாக கண்டிக்கின்றது.
மோசமான நடத்தை
வணக்கத்துக்குரிய மதத்துறவி மீது மிக மோசமான நடத்தையை காண்பித்தமை மிகவும் பாரதூரமான தவறாகும்.
இலங்கையில் உள்ள அனைத்து மதத்தலைவரைகளையும் சமனாக மதிக்க வேண்டிய சட்டத்தை நிலைநாட்ட வேண்டியவர்கள் ஒரு தலைபட்சமாக சட்டரீதியற்ற முறையில் தனியார் காணியில் அடாத்தாக நிறுவப்பட்டுள்ள ஒரு மதக்கட்டிடத்திற்காக அதனை எதிர்த்து போராடிய அந்த பிரதேசத்து மதத்தலைவரை மிலேச்சுதனமாக தள்ளிச் சென்று வாகனத்தில் ஏற்றி கைது செய்தமை எமது சமயத்தை அவமதித்த செயலாகவே பார்க்கின்றோம்.
இந்த விடயத்தில் அரசு உடனடியாக பக்கச்சார்பற்ற விசாரணை முன்னெடுத்து சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எதிர்காலத்தில் இவ்வாறான எமது சமயத்தலைவர்களை அவமதிக்கும் செயலை முற்றுமுழுதாக நிறுத்துவதற்கு உறுதி அளிக்க வேண்டும் என்பதை சைவசமய மக்கள் சார்பாக அகில இலங்கை சைவ மகா சபையினராகிய நாம் ஆழமாக வலியுறுத்தி நிற்கின்றோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |