விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட அவ்றோ விமானம் - பின்னணியில் நடைபெற்ற சுவாரசியமான சம்பவம்
1995ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 3ஆம் கட்ட ஈழ யுத்தம் ஆரம்பமாகி ஒரு வாரத்தில், பாலாலி விமானப்படைத் தளத்தில் இருந்து புறப்பட்ட சிறிலங்கா வான்படையின் அவ்றோ விமானம் மீது விமான எதிர்ப்பு ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டு அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியிருந்தார்கள் விடுதலைப் புலிகளின் ராதா வான் பாதுகாப்பு அணியினர்.
விடுதலைப் புலிகளின் வரலாற்றில் அவர்கள் விமான எதிர்ப்பு ஏவுகணையைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்திய முதலாவது சந்தர்ப்பம் அது.
1995ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி மாலை 4.20 மணியளவில், CR-835 Avro HS-748 என்ற விமானம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் விமானிகள் உட்பட அந்த விமானத்தில் பயணம் செய்த 51 படையினரும் கொல்லப்பட்டார்கள்.
கொல்லப்பட்டவர்களுள் சிறிலங்கா வான்படையின் வட பிராந்திய கட்டளைத் தளபதி றொஜர் வீரசிங்கவும் ஒருவர்.
அந்தத் தாக்குதலை மேற்கொள்வதற்காக சென்ற தலைவர் பிரபாகரன் அவர்களின் மெய்ப்பாதுகாவலர்களைக் கொண்ட ராதா வான்பாதுகாப்பு பிரிவில் அங்கம் வகித்த ஒரு முன்னாள் போராளி, அந்த நடவடிக்கையில் நடந்த சுவாரசியமான ஒரு சம்பவம் பற்றி பகிர்ந்திருந்ததைச் சுமந்து வருகின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
