இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்த இந்திய துணை ஜனாதிபதி

Bandaranaike International Airport C. P. Radhakrishnan Sri Lanka India
By Sathangani Apr 19, 2026 10:44 AM GMT
Report

புதிய இணைப்பு

இலங்கை வந்துள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் சற்று முன்னர் கொழும்பு அலரி மாளிகையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான பரஸ்பர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து துணை ஜனாதிபதியும் பிரதமரும் கவனம் செலுத்தியுள்ளனர்.

பிரதமர் அலரி மாளிகையில் வழங்கிய மதிய விருந்துபசாரத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பொதுவான நாகரிக மரபுகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் சந்தித்துள்ளார்.

பொதுவான வரலாறு மற்றும் கலாசார விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தியா - இலங்கை இடையிலான பன்முக உறவுகளை மேலும் ஆழப்படுத்துவது குறித்து அவர்கள் இடையே இதன்போது ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்தியாவின் 'அண்டை நாட்டுக்கு முதலிடம்' கொள்கையையும், இரு நாடுகளினதும் நலனுக்காக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பையும் இந்தியத் துணை ஜனாதிபதி இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இலங்கையில் இந்திய வீடமைப்புத் திட்டம் மற்றும் 'டித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

இலங்கையை வந்தடைந்த இந்திய துணை ஜனாதிபதி

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று (19) காலை நாட்டை வந்தடைந்துள்ளார்.

இந்திய துணை ஜனாதிபதியுடன் 49 பேர் கொண்ட தூதுக்குழுவினரும் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 

இந்திய விமான சேவைக்குச் சொந்தமான 'INDIA - 01' ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்கள் நாளையதினம் (20.04.2026) வரை தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

தையிட்டி காணி அளவீட்டுக்கு நாள் குறித்து விட்டு வெளிநாட்டிற்கு தப்பியோடிய அமைச்சர் : எழுந்துள்ள குற்றச்சாட்டு

தையிட்டி காணி அளவீட்டுக்கு நாள் குறித்து விட்டு வெளிநாட்டிற்கு தப்பியோடிய அமைச்சர் : எழுந்துள்ள குற்றச்சாட்டு

சிறப்பான வரவேற்பு

இந்தநிலையில் விமான நிலையத்தில் வைத்து அவருக்கு, விளையாட்டுத் துறை அமைச்சர் குமார கமகே உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகளால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக அவர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்டவர்களை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

அத்துடன், அரசியல் பிரதிநிதிகளோடு அவர் கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டு, பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாறப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மிதிகமவில் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு

மிதிகமவில் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு

கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021