இலை பறித்துக் கொண்டிருந்தவர் முதலை தாக்குதலுக்கு பலி!
Sri Lanka Police
Batticaloa
By pavan
மாவடிப்பள்ளி ஆற்றின் ஓரத்தில் பொன்னாங்கன்னி இலைக்கறி பறித்துக் கொண்டிருந்த ஒருவர் முதலை தாக்குதலுக்கு இலக்காகி உயிர் இழந்துள்ளார்.
சம்மாந்துறை கோரக் கோயில் பிரதேசத்தை சேர்ந்த 04 பிள்ளைகளின் தந்தையான இராசப்பு சௌந்தராஜன் (61வயது) என்பவரே முதளைத் தாக்குதலில் உயிர் இழந்துள்ளதாக உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த மரணம் குறித்து கல்முனை பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.ஜவாஹிர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
உயிர் இழந்தவருக்கு நஸ்டஈடு
இச்சம்பவம் தொடர்பாக சம்மாந்துறை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு மரணித்த சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் முதலைத் தாக்குதலில் உயிர் இழந்தவருக்கு நஸ்டஈடு கொடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி