உலகின் முதல் தங்க முலாம் பூசப்பட்ட விடுதி : எங்குள்ளது தெரியுமா...!
உலகின் முதல் தங்க முலாம் பூசப்பட்ட விடுதி வியட்நாமில் கட்டப்பட்டுள்ளது.
இந்த 6 நட்சத்திர விடுதி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள அதேவேளை பலகோடி வருமானத்தையும் ஈட்டி வருகிறது.
ஹனோய் கோல்டன் லேக் விடுதி என அழைக்கப்படும் இந்த தங்க விடுதி, கடந்த 2009 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது.
தங்க முலாம் பூசப்பட்ட விடுதி
சுற்றுலா பயணிகளை அதிகம் தன்பால் இழுக்கும் வியட்நாம் நாட்டில் இந்த தங்க முலாம் பூசப்பட்ட விடுதி அமைக்கப்பட்டுள்ளது.
வியட்நாமின் தலைநகர் ஹனோயில் உள்ள ஹனோய் கோல்டன் லேக் விடுதியின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் 24 கரட் தங்கத்தால் முலாம் பூசப்பட்டுள்ளது.
இது உலகின் முதல் தங்கமுலாம் பூசப்பட்ட விடுதியாக பெயரிடப்பட்டுள்ளது.
சலுகைகள்
கடந்த 2009 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் விடுதியில், விருந்தினர்களுக்கு, தங்கக் கோப்பையில் காபி வழங்கப்படுகிறது.
அத்துடன், இந்த விடுதியில் உள்ள தட்டுகள், கரண்டிகள் உள்ளிட்ட அனைத்தும் தங்க முலாமிடப்பட்டுள்ளது. இங்குள்ள நீச்சல் குளம், மொட்டை மாடி, குளிக்கும் பாத் டப் மற்றும் கழிவறை ஆகியவையும் தங்க முலாமிடப்பட்டுள்ளது.
இந்த விடுதியில் உள்ள நடைபாதை, சுவர், தளம் என சுமார் 54 ஆயிரம் அடி பரப்பு எல்லாமே தங்க முலாம் பூசியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுதியில் சுமார் 25 தளங்கள் உள்ளன. அதில் மொத்தமாக 400 விருந்தினர் தங்கும் அறைகள் உள்ளன.
மன அழுத்தத்தை குறைக்கும் தங்கம்
சாதாரண மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை செல்லும் இடமாக ஹனோய் கோல்டன் லேக் விடுதி கருதப்படுகிறது.
All that glitters is gold at this Vietnamese hotel: The Dolce Hanoi Golden Lake Hotel hopes to lure in guests with its new luxury twist https://t.co/DHXZwG00dW pic.twitter.com/RbEGLJpSPM
— Reuters (@Reuters) July 3, 2020
இந்த ஆடம்பர தங்க விடுதியில் ஒரு நாள் தங்குவதற்கு 250 அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் மன அழுத்தத்தை குறைக்கும் என்று நம்பப்படும் நிலையில், இந்த விடுதி தங்கத்தால் அமைக்கப்பட்டுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |