கில்லி முதல்வருக்கு கிண்டிமாளிகை குடைச்சல்!
தமிழக வாக்காளர்கள் வழங்கிய எந்த ஒரு தரப்புக்கும் முழுமையான அறுதிப் பெரும்பான்மை வழங்காத வாக்களிப்பு முறை, விஜய்யின் முதல்வர் பதவியேற்பு நகர்வைக் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத நிலையை உருவாக்கியுள்ளது.
சட்டப்பேரவையின் தற்போதைய ஆட்சிக்காலம் இன்னும் இரண்டு நாட்களில், எதிர்வரும் பத்தாம் திகதியுடன் முடிவுக்கு வருவதால் மே 11 ஆம் திகதிக்குள் புதிய ஆட்சியை அமைத்தாக வேண்டிய நிலையில் இன்று காலை எதிர்பார்த்தது போல விஜய்யின் பதவியேற்பு இடம்பெறவில்லை.
அதற்குப் பின்னர் விஜய் ஆட்சியமைப்பதற்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அழைப்பு விடுத்ததான தகவல்கள் வந்தாலும், இன்று மாலை வரை அந்த அதிகாரபூர்வ அறிவிப்பு வராததால், கில்லியின் முதல்வர் பதவி கிண்டி ஆளுநர் மாளிகையில் ஜனநாயகத்திற்குப் புறம்பாக ஊசலாடுவதால் சி. ஜோசப் விஜய் என்னும் நான் என்ற தருணத்திற்கு இன்னமும் வழிவிடப்படவில்லை.
ஒரு மாநிலத்தின் ஆட்சிப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றமே தவிர ஆளுநர் பணியகம் அல்ல என ஏற்கனவே இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்தாலும் ஆளுநரின் இந்த புதிய ஆலாபனைகளில் ஐயங்களும் சீற்றங்களும் வெடித்த நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்தி வருகிறது ஐபிசி தமிழின் செய்திவீச்சு நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |