மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு திரும்பும் சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா
இந்தியாவின் (India) பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சி தயாரித்து வழங்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 போட்டியில் யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த சிந்துமயூரன் பிரியங்கா பங்குபற்றியிருந்தார்
இந்நிலையில் அவரது பாடல் சுற்றானது நிறைவடைந்த நிலையில் அவர் மீண்டும் இலங்கைக்கு திரும்பவுள்ளார்.
அதன்படி, எதிர்வரும் 22.05.2024 வியாழக்கிழமை மு.ப 11.45 மணியளவில் பலாலி விமான நிலையத்தை (Jaffna international Airport) வந்தடையவுள்ளார்.
பலரும் பாராட்டு
பிரியங்கா சிறுவயது முதல் இசையில் ஆர்வம் காட்டி வந்த நிலையில் கடந்த தை மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இசை நிகழ்வின் மூலம் பாடகியாக அறிமுகம் ஆனார்.
அதன் பின்னர் அவரது குரலின் இனிமை மற்றும் பாடல் திறமை போன்ற காரணங்களால் மேடை இசை நிகழ்வுகளில் அவருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது.
இந்தநிலையில், விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் - 10 போட்டியாளர்கள் தெரிவில் கலந்து கொண்டு அவரும் போட்டியில் உள்வாங்கப்பட்டிருந்தார்.
போட்டியில் பங்குபற்றி பிரியங்கா நடுவர்கள் உட்பட பலரது பாராட்டினையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
