சமூக வலைத்தளங்களுள் வீரியமாகும் பெண்களுக்கெதிரான வன்முறைகள்

Social media Violence Against women Abuest
By MKkamshan Dec 10, 2021 08:41 AM GMT
Report
Courtesy: Kirisha Surenthiran

சதாரணமாக எமது சமூகத்தை நோக்கினால் அங்கே வன்முறைகள் இன்றைய அளவில் அதிகளவு காணப்படுகின்றன.

வன்முறை எனும் போது மனிதனானவன் தனது அதிகாரத்தையும் ஆளுமையையும் பயன்படுத்தி தன்னைச் சார்ந்த மக்களையும் தன்னைச் சாராத மக்களையும் தனது ஆளுமைக்குள் உட்படுத்துகின்ற போது அதனை வன்முறை என்று கூறலாம்.

இன்றையளவில் வன்முறைகளாக குடும்ப வன்முறைகள், இன வன்முறைகள், பால் சார் வன்முறைகள், சமயம் சார் வன்முறைகள், ஊடகங்கள் சார் வன்முறைகள் என்றவாறு வன்முறைகளை இன்னும் பலவகைகளில் கூறிக்கொண்டே போகலாம்.

வன்முறை ஒன்று ஏற்படும் போது அங்கே பாரிய விளைவுகளையும் தாக்கங்களையும் நாம் எதிர் கொள்ளுகின்றோம். அவ் வன்முறைகள் பல்வேறு காரணங்கள் மற்றும் நோக்கங்கள் அடிப்படையில் இடம்பெறுவனவாகக் காணப்படுகின்றன.

இலங்கையைப் பொறுத்தவரையில் வன்முறைகள் எனும் போது பாரியளவில் பெண்களுக்கே நிகழ்வதாக 2018 இன் ருரே்சு ஆய்வில் கூறிப்பிட்டுள்ளது.

அவ் வன்முறைகள் உடல் ரீதியானது மட்டுமின்றி உளம் ரீதியான தாக்கங்களாகவும் காணப்படுகின்றன.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எனும் போது சாதாரணமாக குடும்பத்தில் இருந்தே ஆரம்பமாவதைப் பார்க்கலாம். அதைத் தாண்டி இன்றைய தொழினுட்ப வளர்ச்சி கொண்ட உலகிலே தொழினுட்ப கண்டுபிடிப்புக்கள் கூட பெண்களுக்கு பாதகமாக பல வேளைகளில் மனிதர்களால் பயன்படுத்தப்படுகிறன.

அந்த வகையில் சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய தொடரிணை ஊடகங்கள் பாரிய செல்வாக்குச் செலுத்துகின்றன. ஊடகங்கள் சாதாரணமாக தொடர்பாடல் எனும் நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன.

அதையும் தாண்டி சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய தொடரிணை ஊடகங்களை வன்முறை சார் நோக்குடனும் பயன்படுத்துகின்றனர்.

ஆதிக்க உணர்வுகள் மற்றும் பாலியல் இச்சைகள் போன்றவற்றையே அதிகளவில் கொண்டவர்கள், தம்மால் பெண்களை வன்முறைக்குள் உட்படுத்த முயல்வதையும் உட்படுத்துவதையும் அதிகளவில் சமூக ஊடகங்களில் காணலாம்.

சமூக ஊடகங்கள் எனும் போது அங்கே Facebook, messenger, whatsup, viber, instagram, twitter போன்ற ஊடகங்களே அதிகம் பாவிக்கப்படுகின்றன.

அந்த வகையில் இச் சமூக ஊடகங்களிலே அதிக வன்முறைகள் பெண்களுக்கெதிராக நடக்கின்றன.

பெண்களுக்கெதிரான இவ் வன்முறைகளை நிகழ்த்துபவர்கள் யார் என்று நோக்கினால் சாதாரணமாக ஆண்களையே கூறுவார்கள். ஆனால் ஆண்கள் மட்டுமின்றி பெண்கள் கூட பெண்கள் மீது வன்முறைகளை சமூக ஊடகங்களில் மேற்கொள்கின்றனர்.

இது வருத்தப்படத்தக்க விடயமாக காணப்படுகின்றது. அவ்வாறாக உளவியல் ரீதியான வன்முறைகளை அதிகளவில் பெண்கள் மீது பெண்களே மேற்கொள்கின்றனர்.

இப் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் சமூக ஊடகங்கள் ஊடாக ஆணோ அல்லது பெண்ணோ மேற்கொள்வதற்கு பல காரணங்கள் காணப்படுகின்றன.அக் காரணங்கள் பெருமளவில் எதிர்வினைச் சிந்தனைகளாகவே காணப்படுகின்றன.

பெண்ணிற்கான தொழில்வாய்ப்புக்கள் என்று நோக்கினால் அங்கே பெண்கள் மீது ஆண்கள் பாரிய வன்முறைகளை சமூக ஊடகங்கள் ஊடாக மேற்கொள்கின்றனர்.

குறித்த தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை புரியும் பைரவி தனக்கான தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ள முயற்சி செய்யும் போது அங்கே குறித்த நிறுவனத்துக்குள் வேலைவாய்ப்பிற்காக நேர்காணலிற்கு முகம் கொடுக்க நேரிடும் சந்தர்ப்பத்தை பெற்று தருவதாயின் தன்னுடன் உடலுறவு வைத்துக்கொள்ளுமாறு சமூக ஊடகங்கள் ஊடாக கட்டாயப்படுத்தியதாகவும் அதனால் பாரிய உளச் சிக்கலுக்கு உட்பட்டதாகவும் இறுதியில் தான் வேறு வேலைவாய்ப்பை தேடிச் சென்றதாகவும் தனக்கு நிகழ்ந்த வன்முறையை பகிர்ந்து கொண்டார்.

இப்படியான வன்முறைகள் சாதாரணமாக குறித்த பெண்களை மாத்திரமே தாக்காது அவர்களது குடும்பத்தினையும் பாதிப்பதாகவும் கூறினார்.

சமூக ஊடகங்கள் ஊடாக உலகளாவிய ரீதியில் நோக்கும் போது கூட அங்கே 6 நிமிடத்திற்கு ஒரு பெண் துஷ்பிரயோகத்துக்கு உட்படுவதாகவும், கனடாவில் நான்கு பேருக்கு ஒரு பெண் வன்முறைக்குள் உட்படுவதாகவும் ஓன்டாரியோ பெண்கள் நீதி வலையமைப்பு கூறுகின்றது.

இதே போல இலங்கையிலும்  கூட பெண்களிற்கான வன்முறைகள் நிகழ்ந்து கொண்டு தான் உள்ளன. காதல் மற்றும் அதைத்தாண்டி காதல் இடைநிறுத்தப்படும் போது சமூக ஊடகங்கள் மூலம் ஆண்கள் பெண்களை மிரட்டி உளவியல் ரீதியான வன்முறைக்கு உட்படுத்துகின்றனர்.

இதைத் தவிர சமூக ஊடகங்களில் பெண்கள் தரவேற்றும் புகைப்படங்கள் மற்றும் தகவல்களை எடுத்து அதனூடாக பொய் முகநூல் கணக்கினை உருவாக்கி அதனை வைத்து குறித்த பெண்ணை பயப்படுத்தி தங்களுக்கு சார்பாக உடலியல் ரீதியாகவோ அல்லது உளவியல் ரீதியாகவோ வன்முறைக்கு உட்படுத்துகின்றனர் என்று ACT நிறுவனத்தின் உறுப்பினரான ஆ.N.Litpfahiya கூறுகின்றார்.

அதற்கான தீர்வுகளை அவரிடம் கேட்கும் போது பெண்கள் எதற்கும் பயப்பிடாமல் குறித்த பிரச்சனைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பதைச் சரியாக அறிந்து செயற்பட வேண்டும்.

உதாரணமாகப் பார்த்தால் முகநூல் கணக்கினை உருவாக்கி மிரட்டி வன்முறைக்கு உட்படுத்த முயலும் போது குறித்த முகநூல் கணக்கினை இல்லாது செய்ய சில நடைமுறைகள் முகநூலில் காணப்படுகின்றது.

அதனை நாம் சரியாகச் செய்தால் நாம் இவ் சமூக ஊடகங்கங்களின் ஊடாக நிகழும் வன்முறைகளில் இருந்து தப்பிக் கொள்ளலாம் என்று முன்னோக்கு சிந்தனையாக தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

அதிகளவில் வறுமை மற்றும் மன அழுத்தம் மூலம் பெண்கள் சமூக ஊடகங்களுக் கூடாக வன்முறைக்கு உட்படுவதாக குறித்த நிறுவனத்தில் வேலை புரியும் கல்யாணி கூறுகின்றார்.

தங்களது வேலைப் பதவி உயர்வுகள் பல தடவைகளில் ஆண்களின் கைகளுக்குள்ளே காணப்படுவதால் குறித்த பெண் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவராகக் காணப்படின் அவரை இலகுவாக இச் சமூக ஊடகங்கள் ஊடாக வன்முறைக்கு உட்படுத்துவதாகவும் அதனை சரியான முறையில் கைக்கொள்ளத் தெரியாத பல பெண்கள் வேலையை விட்டு விலகிச் செல்வதாகவும் தான் கண்ட அனுபவங்களை வைத்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

 கல்யாணி அதனை தீர்க்கப் பல பெண்கள் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை இதற்கு முகம் கொடுத்து எதிர்த்து நிற்கும் போது அந்த பெண்ணின் குடும்பம் கூட பாரிய வன்முறையை எதிர்நோக்குவதாக மாறிவடும் என்று பெண்கள் பணப்பிடுவதை தானே நேரில் கண்டதாக தனது உளக்குமுறல்களை பகிர்ந்து கொண்டார்.

துறை சார்பாக நோக்கும் போது பல சந்தர்ப்பங்களில் பெண்கள் வன்முறைக்கு உட்படுகின்றனர். ஊடகத் துறைசார்பாக பார்த்தால் தலைமைத்துவம் பெருமளவில் ஆண்களே கொண்டிருப்பதால் அங்கே உளரீதியான வன்முறைகள் பெண்களுக்கு நிச்சயம் நடைபெறும். பொறுப்பான சிறந்த ஊடக நிறுவனத் தலைமைகள் காணப்படின் அங்கே இவ் வன்முறைசார் சிக்கல்கள் காணப்படாது என்பது எனது கருத்தாகும்.

இவ்வாறான பெண்களுக்கெதிரான வன்முறைகள் தனியே தொழில் ரீதியாக மட்டுமன்றி சமூக சேவைகளில் ஈடுபடும் பெண்களை எங்களுடைய சமூகம் பெருமளவில் ஏற்றுக்கொள்வதில்லை.

அவ்வாறு சமூகத்தில் பாரபட்சமின்றி ஆண், பெண் என்ற பேதமின்றி சேர்ந்து முன்னேற நினைக்கும் போது அங்கே பெண்களை சதாரண வீட்டுவேலைக்கு ஏற்றவள் தான் என்றே பெருமளவில் மட்டுப்படுத்தியுள்ளது.

சாதாரணமாக சமூகம் மீது கொண்ட பற்றால் சமூக சேவைகளை செய்ய முற்படும் பெண்களை அதிகம் முகப்புத்தகங்களில் பேசி சித்தரித்து உளவியல் ரீதியாக வன்முறைக்கு எமது சமூகத்தில் உள்ள ஆண்கள் உட்படுத்துகின்றனர்.

ஆனால் விதிவிலக்காக பலமான சிந்தனை கொண்ட பெண்களிற்கு ஆண்களின் ஒத்தழைப்பு கிடைக்கும் போது அவர்களின் ஆரம்பக் கட்டத்தில் சில உளவியல் சார் வன்முறைகள் காணப்பட்டாலும் பின்னர் சரியான ஓர் இடம் சமூகத்தால் கொடுக்கப்படுகிறது.

இவ்வாறாக யாழ்ப்பாணம் கே.கே.பி இளைஞர் கழக தலைவர் க. சந்தோஸ் பெண்களையும் சமூக சேவைகளில் ஈடுபட சில தடவைகளில் சமூக ஊடகங்கங்களிற்கு ஊடாக வெளிப்படும் வன்முறைகள் வரம்பிடுவதாகவும் அதனை தகர்த்தெறிய ஆண் பெண் என்ற வித்தியாசமின்றி அனைவரும் ஒன்றுபட்டு வன்முறையின்றி செயற்படவேண்டும் என்றும் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

ஓன்டாரியோ பெண்கள் நீதி வலையமைப்பு பெண்களுக்கெதிரான வன்முறைகளையும் அதற்கான தீர்வுகளையும் பற்றிய சட்டபூர்வமான தகவல்களை வழங்குகின்றது.

இவ்வாறாக பல நிறுவனங்கள் பெண்களிற்கெதிரான சமூக ஊடகங்கங்களின் வெளிப்படுத்தல்களை முன்வைக்கின்ற அதேவேளை அதற்கான தீர்வுகளையும் வழங்குகின்றன.

இவ்வாறாக சமூக ஊடகங்கங்களில் ஊடாக நிகழும் வன்முறைகளைப் பல பெண்கள் சரியான முறையில் கையாளத் தெரியாமல் பல தவறான முடிவுகளை எடுக்கின்றனர். இவ் சமூக ஊடகங்கங்களின் ஊடாக பெண்களிற்கு நிகழும் வன்முறைகள் பல எதிர்வினைகளை ஆற்றுகின்றன.

அந்த வகையில் இவ் எதிர்வினை பல மாற்றங்களையும் ஒவ்வொரு சமூகத்திலும் உண்டு பண்ணுகின்றது. இவ்வாறான வன்முறைக்கு பயப்படாமல் பல பெண்கள் அவ் வன்முறை ஊடாக தமது சமூகத்திற்கு பயந்து பல தவறான முடிவுகளை முன்வைக்கின்றனர்.

தற்கொலைகள், தொழிலை விட்டு செல்லுதல் எனப் பல முடிவுகளை எடுக்கத்தூண்டப்படுகின்றனர். இவ்வாறாக நிகழும் நிகழ்வுகள் வேறு நபர்களின் ஆதிக்கத்தால் நிகழ்கின்ற அதேவேளை சமூக ஊடகங்கங்களை அதிகமாக பாவிக்கும் பெண்களிற்கு கூட இவ்வாறான வன்முறைகள் சமூக ஊடகங்கங்கள் ஊடாக நிகழ்கின்றன.

ஆகவே பெண்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது அதனைச் சரியான வகையில் பயன்படுத்த முயல வேண்டும். தெரியாத நபர்களுடனான சமூக ஊடகங்கங்கள் ஊடான தொடர்புகளை சரியான வகையில் மேற்கொள்ள வேண்டும்.

இதைத் தவிர சமூக ஊடகங்கங்களில் தமக்கு தெரியாத நபர்களுடனான தொடர்பை மேற்கொள்ளாது இருக்கவேண்டும். இ;வாறாக இருக்கும் சந்தர்ப்பங்களில் சரியான பயன்பாட்டைப் பெற்றுக் கொள்ளலாம்.

அத்துடன் வன்முறைகளும் இடம்பெற வாய்ப்புக்கள் இல்லை. இத்துடன் இவ்வாறான சமூக ஊடகங்கங்களின் ஊடாக நிகழும் வன்முறைகளை சரியான சட்ட நடைமுறைகள் மூலம் தீர்க்கும் வழிமுறைகளையும் அறிந்திருப்பது பெண்களுக்கு நல்லதாகும்.

ஆகவே இவ்வாறான சமூக ஊடகங்கங்களிற்கு ஊடான வன்முறைகளை பெண்களே தாமாக இல்லாது ஒழிக்க முடியும். எது எவ்வாறாயினும் இவ்வாறான சமூக ஊடகங்கங்களின் ஊடாக இடம்பெறும் வன்முறைகளைப் பொருற்படுத்தாது சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும்.  

- Kirisha Surenthiran -

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025