இலங்கை ரசிகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இந்திய துடுப்பாட்ட வீரர்கள்!
Rohit Sharma
Virat Kohli
Cricket
India
By pavan
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் விராட் கோலி மற்றும் தற்போதைய ரோஹித் சர்மா ஆகியோர் சிறப்பு திறன் கொண்ட இலங்கை துடுப்பாட்ட ரசிகரான கயான் சேனாநாயக்கவை சந்தித்துள்ளனர்.
2022ம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண தொடர் தற்போது துபாயில் இடம்பெற்று வருகின்றது.
இதன்படி துபாய் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தில் நேற்றைய தினம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மிகவும் விறுவிறுப்பான போட்டி இடம்பெற்றிருந்தது.
மிகவும் பரபரப்பான இந்த ஆட்டத்தின் இறுதியில் இந்திய அணி பாகிஸ்தானைதோற்கடித்து வெற்றியைப் பெற்றது. இந்த போட்டி இடம்பெற்று ஒரு நாள் கழித்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் கயான் சேனாநாயக்கவை சந்தித்தனர்.
இது தொடர்பான மேலும் விரிவான செய்திகளை காண்பதற்கு காணொளியை தொடரவும்
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்