மீண்டும் விசா சேவை ஆரம்பம் : இந்தியாவின் செயற்பாட்டை வரவேற்கும் கனடா
கனடாவிற்கான விசா சேவையை இந்தியா மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவின் இந்த செயற்பாட்டை கனேடிய அரசாங்கம் வரவேற்றுள்ளது.
கனடாவில் காலிஸ்தான் அமைப்பைச்சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சம்பவம் இரு நாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக கனடா நாட்டவர்களுக்கு விசா வழங்கும் நடவடிக்கைகளை இந்திய அரசு நிறுத்தி வைத்தது.
மீண்டும் விசா சேவை
இந்த சூழலில் வணிகம், மருத்துவம் உட்பட குறிப்பிட்ட சில பிரிவுகளுக்கான விசா சேவையை மீண்டும் தொடங்குவதாக இந்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.
இந்த நிலையில் விசா சேவையை மீண்டும் தொடங்கிய இந்தியாவின் முடிவை கனடா வரவேற்றுள்ளது. இது குறித்து கனடாவின் குடியேற்றத்துறை அமைச்சர் மார்க் மில்லர் கூறுகையில்,
நல்ல அறிகுறி
"கனடா பிரஜைகள் பலரின் ஒரு கவலையான நேரத்துக்கு பிறகு, இந்தியாவின் இந்த நடவடிக்கை ஒரு நல்ல அறிகுறி. விசா சேவை நிறுத்தம் நடந்திருக்கக் கூடாது என்பதே எங்கள் உணர்வு.
உண்மையில் இந்தியாவுடனான தூதரக நிலைமை பல சமூகங்களில் மிகுந்த அச்சத்தை உருவாக்கியுள்ளது" என்றார்.