டெங்கு நோய் அபாயம் : மூடப்பட்ட பல்கலைக்கழகம் நாளை மீண்டும் திறப்பு!
டெங்கு நோயின் பரவல் காரணமாக இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்த கொழும்பு கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படவுள்ளது.
அதன்படி, குறித்த பல்கலைக்கழகத்தை, நாளை (13) முதல் மீண்டும் திறக்க பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, 'கிளீன் சிறிலங்கா' வேலைத்திட்டத்திற்கு இணங்க, பல்கலைக்கழக வளாகத்தைச் சுத்தப்படுத்தும் மற்றும் புகைத்தல் நடவடிக்கைகள் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளன.
டெங்கு நோயாளர்கள் அடையாளம்
இதேவேளை இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை 67,000க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில், நுளம்புகள் பெருகுவதற்கான இடங்களைப் பேணுபவர்களுக்கு எதிராகச் சட்டத்தை மிகத் தீவிரமாகச் செயற்படுத்தி வருவதாகப் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.