இந்தியா பறந்தார் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்
india
visit
viyalendran
By Vanan
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர் விசேட அழைப்பின் பேரில் உத்தியோக பூர்வ விஜயமொன்றின் ஊடாக இந்தியா பயணமாகியுள்ளனர்.
கிராமிய அபிவிருத்தி, மற்றும் விவசாயம், கைத்தொழில் சார் முதலீடு மற்றும் கால்நடை துறைசார் மேம்பாடு தொடர்பான விசேட கலந்துரையாடலொன்றினை மேற்கொள்வதற்காக சென்றுள்ள பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் உள்ளிட்ட குழுவினர் மேலும் பல அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான விசேட சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
