புடின் ஒரு போர்க் குற்றவாளி - அமெரிக்க நாடாளுமன்றில் தீர்மானம்!
russia
ukraine
parliament
Vladimir Putin
By Thavathevan
ரஷ்ய அதிபர் புடினை ஒரு போர்க் குற்றவாளி எனக் கண்டிக்கும் தீர்மானமொன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
அதன்படி உக்ரைன் மீது ரஷ்யா யுத்தத்தில் ஈடுபடுவது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபையில் குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லிண்ட்சே கிரகாம் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளார்.
அந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது, இந்தத் தீர்மானத்துக்கு ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஒன்றாகவே ஆதரவு தெரிவித்துள்ளன.
ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் சக் ஷுமர் இதுபற்றி கூறும்போது, ‘‘உக்ரைன் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு புடின் பொறுப்பு ஏற்பதில் இருந்து தப்பிக்க முடியாது என்று இரு கட்சியினரும் ஒன்றிணைந்து தெரிவித்து இருக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி