வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஏழாம் நாள் விவாதம்
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஏழாம் நாள் விவாதம் இன்று (20) நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
அந்தவகையில் இன்றைய நாளுக்கான சபை நடவடிக்கைகள் காலை 9.30க்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் ஆரம்பமாகியுள்ளன.
காலை 09.30 முதல் 10.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறவுள்ளதோடு, காலை 10.00 முதல் மாலை 06.00 வரை 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.
அத்துடன் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
2027ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பை நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கடந்த 12 ஆம் திகதி சமர்ப்பித்திருந்தார்.
இந்தநிலையில் 13 ஆம் திகதி முதல் இன்று (20) வரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் தொடரவுள்ளதுடன், இன்றைய தினம் மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து குழுநிலை விவாதம் (மூன்றாம் வாசிப்பு) நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன் மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |