மொஸ்கோ படையெடுப்பு நிறுத்தம் - பின்வாங்கிய வாக்னர் படை..!
பெலாரஸ் அதிபரின் மத்தியஸ்த பேச்சு வெற்றியடைந்த நிலையில், வாக்னர் படையின் தலைவர் ரஷ்யாவில் கிளர்ச்சியை நிறுத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் ஒப்புதலுடன் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ நடத்திய மத்தியஸ்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மொஸ்கோவை இலக்காகக் கொண்ட படையெடுப்பிலிருந்து இருந்து வாக்னர் குழு பின்வாங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், வாக்னர் குழுமத்தின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஷின் டெலிகிராமில் ஒரு செய்தியை பகிர்ந்துள்ளார்.
பின்வாங்குமாறு உத்தரவு
மொஸ்கோவை இலக்காகக் கொண்ட நடவடிக்கையில் இருந்து விலகுவதே அந்த செய்தியின் சுருக்கம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மொஸ்கோ மீதான அணிவகுப்பை நிறுத்திவிட்டு உக்ரைனில் உள்ள கள முகாம்களுக்குப் பின்வாங்குமாறு பிரிகோஷின் தனது கூலிப்படையினருக்கு உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெலாரஸ் அதிபர் முன்மொழிந்த தீர்வு விதிமுறைகளை வாக்னர் படை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில், இரத்தம் சிந்துவதைத் தவிர்ப்பதற்காக திரும்பப் பெறப்பட்டது என்று பிரிகோஷின் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
