பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் அவதானம் - நடக்கும் புதிய விதமான மோசடி
Sri Lanka Police Investigation
Crime Branch Criminal Investigation Department
Crime
By Pakirathan
பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுடன் பழக்கத்தை ஏற்படுத்தி அவர்களுக்கு போதைப்பொருள் கொடுத்து பொருட்களை திருடும் மோசடிகள் இடம்பெறுவதாக எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
அந்தவகையில், இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரை கட்டுநாயக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரிடமிருந்து 4 போதை மாத்திரைகள் மற்றும் தங்க ஆபரணங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
ஆகவே, பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் அவதானமாக இருக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
