அநுர அரசைக் கவிழ்க்க நினைப்பவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
அநுர (Anura Kumara Dissanayake) அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிக்கும் எதிர்க்கட்சிகள் எதிர்காலத்தில் சிறைச்சாலைக்கு செல்லவேண்டி ஏற்படும் என அமைச்சர் சமந்த வித்யாரத்ன (Samantha Vidyarathna) தெரிவித்துள்ளார்.
ரிதிமாலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஆட்சியைக் கவிழ்ப்பதாக கருத்து வெளியிடும் எதிர்கட்சிகளுக்கு வெளியே தெரியாவிடினும், அவர்களின் பணி தொடர்பான கோப்புகள் உள்ளிருந்து உருவாக்கப்படுகின்றன.
சிறைக்கு செல்ல வேண்டிய நிலை
இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் ஒன்றிரண்டு வழக்குகள் நீதிமன்றத்துக்கு வரும். வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்புகள் வரும்போது, அரசைக் கவிழ்க்க நினைப்பவர்கள் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அரசை யாராலும் கவிழ்க்க முடியாது” என தெரிவித்தார்.
இதேவேளை தேசிய மக்கள் சக்தி அமைச்சர்களின் அனுபவமின்மையால் தற்போதைய அரசாங்கம் கோட்டாபயவின் அரசாங்கத்தை விடவும் விரைவில் கவிழும் அபாயம் காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) நேற்று (02) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |