இலங்கை ரூபாவிற்கு ஏற்படவுள்ள நிலை - விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கை ரூபா எதிர்காலத்தில் மிகவும் கடினமான காலத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளதாக புளூம்பேர்க் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
உலக நாணயங்களில் இலங்கை ரூபா மிகவும் செயலில் உள்ள நாணயமாக உருவெடுத்துள்ள போதிலும், இலங்கை இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தி கடனை திருப்பி செலுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவதால், எதிர்காலத்தில் இலங்கை ரூபா மிகவும் கடினமான காலத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அந்த ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா
நேற்றைய தினம் (31) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா 1.4 வீதத்தால் வலுவடைந்துள்ள போதிலும், இந்த வருட இறுதிக்குள் அமெரிக்க டொலர் 350 இலங்கை ரூபாவிற்கு திரும்பும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
ரூபாவின் பெறுமதி வலுவடைவதற்குக் காரணம்
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு மற்றும் பிணைமுறிச் சந்தை கொடுக்கல் வாங்கல்கள் அதிகரித்தமையே இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைவதற்குக் காரணம் என புளூம்பேர்க் செய்திச் சேவை மேலும் தெரிவித்துள்ளது.
