நாட்டை வெற்றிகொள்ளும் வழி இது தான் - சர்வ கட்சிக் கூட்டத்தில் சஜித் தெரிவிப்பு
ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்புவதற்கு இன, மதம், சாதி வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும், சந்தர்ப்பவாதத்தைத் தவிர்த்து நாட்டை கட்டியெழுப்பும் நோக்கத்தை முதன்மையாக் கொள்ள வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற சர்வ கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். மேலும் உரையாற்றிய அவர்,
மக்களிடையே நம்பிக்கை
“இனவாதம், பிரிவினைவாதம், மதவாதம் ஆகியவற்றை நிராகரிக்கும் சட்ட விதிகளை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.
அனைத்து இன மக்களிடையே நம்பிக்கையை உறுதி செய்வது அவசியம்.
அரசியல் ரீதியாக மற்றும் கருத்தியல் ரீதியாக நிலவும் வேறுபாடுகள் மதிக்கப்பட வேண்டும்.
ஒரு நாடு என்ற வகையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியிருக்கும் தருணத்தில் இவ்வாறான பேதங்களை கடந்து செயற்பட வேண்டும்'' என்றார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா
