போரை முடிவிற்கு கொண்டுவர அமெரிக்காவிற்கு ஈரான் விதித்துள்ள நிபந்தனை
அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர நாங்கள் தயார் என ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி இன்று செவ்வாய்க்கிழமை (நவ. 10) தெரிவித்துள்ளார்.
ஆனால், எங்களுடைய கோரிக்கைகளை அமெரிக்கா நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கத்தார் பிரதமருடன் சந்திப்பு
வெள்ளை மாளிகையில் கத்தார் பிரதமருடன் கலந்துரையாடிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “ஈரானுடன் இராணுவ ரீதியிலான போர் முடிவு பெற்றுவிட்டது” என்று தெரிவித்தார்.

இதனிடையே, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டும் என்றால், அனைத்து முனைகளிலும் போரை முடிவுக்குக் கொண்டு வருதல், முடக்கப்பட்ட ஈரானிய சொத்துகளை விடுவித்தல், எரிபொருள் மீதான தடைகளை நீக்குதல் மற்றும் ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் தடையை நீக்குதல் போன்ற கோரிக்கைகளை அமெரிக்கா நிறைவேற்ற வேண்டுமென ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
போரை நிறுத்த ஒரே தீர்வு
இதுகுறித்து அப்பாஸ் அராக்ஸி பேசுகையில், “ஈரானுடனான போர் இராணுவ வழிகளாலோ அல்லது தடைகளைத் தீவிரப்படுத்துவதாலோ முடிவுக்கு வராது.

தற்போது பரிசீலனையில் உள்ள ஈரானின் கோரிக்கைகளையும் நிபந்தனைகளையும் நிறைவேற்றுவது மட்டுமே ஒரே தீர்வு” என்று குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |