தாக்குதல் முயற்சி : முற்றாக மறுக்கும் தேர்தல் ஆணைக்குழு

Sri Lanka Police Sri Lanka Police Investigation Sri Lanka election updates General Election 2024
By Sumithiran Nov 14, 2024 08:16 AM GMT
Report

(புதிய இணைப்பு)

வாக்களிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக வெளியான தகவலில் எவ்வித உ்மையும் இல்லையென தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சுதந்திரமான மற்றும் அமைதியான வாக்கெடுப்பை சகித்துக்கொள்ள முடியாத சிலர் இவ்வாறான பொய்யான அறிக்கைகளை வெளியிடுவதாக ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.  

வாக்குச்சாவடியை தாக்க தயாராக வைத்திருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன

வாக்களிப்பு நிலையத்தை தாக்குவதற்கு தயாராக இருந்ததாக கூறப்படும் பாரவூர்தி ஒன்றில் நேற்று (13) நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ரி-56 ரக தோட்டா, துப்பாக்கி, இரண்டு கூரிய கத்திகள் மற்றும் வாள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சூரியவெவ காவல்துறையினர் தெரிவித்தனர். 

இது தொடர்பில் பாரவூர்தியின் உரிமையாளர் மற்றும் குடியிருப்பாளர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பாரவூர்தியின் மேல் பகுதியில் கிடந்த ஆயுதங்கள்

பாரவூர்தியில் ரி-56 துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டு வாக்களிப்பு நிலையத்தை தாக்குவதற்கு தயாராக இருப்பதாக காவல்துறை அவசர இலக்கமான 119 க்கு கிடைத்த தகவலுக்கு அமைய சூரியவெவ காவல்துறையினர் உடனடியாக செயற்பட்டு மேற்கொண்ட விசாரணைகளின் போது பாரவூர்தியின் மேல்பகுதியில் மெழுகு பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, வெடிகுண்டுகள் மற்றும் தோட்டாக்கள் என்பவற்றை கண்டுபிடித்தனர்.

தாக்குதல் முயற்சி : முற்றாக மறுக்கும் தேர்தல் ஆணைக்குழு | Weapons Hidden Lorry To Attack A Polling Station

காவல்துறையினர் மேலதிக விசாரணை

குறித்த ஆயுதங்களை பிரதேசவாசிகள் மறைத்து வைத்திருந்தனரா அல்லது ஏதேனும் குற்றச்செயல்களுக்கு பயன்படுத்துவதற்காக யாரேனும் இந்த ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தார்களா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் பாரவூர்தி காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. 

தாக்குதல் முயற்சி : முற்றாக மறுக்கும் தேர்தல் ஆணைக்குழு | Weapons Hidden Lorry To Attack A Polling Station

வாக்காளர்களுக்கு வழங்க கொண்டுவரப்பட்ட உலர் உணவு பொதிகள் மீட்பு: 3 பேர் கைது

வாக்காளர்களுக்கு வழங்க கொண்டுவரப்பட்ட உலர் உணவு பொதிகள் மீட்பு: 3 பேர் கைது

இன்று அதிகாலை தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய இருவர் கைது

இன்று அதிகாலை தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய இருவர் கைது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024