ஜேர்மனியில் இருந்து உக்ரைனுக்கு ஆயுத விநியோகம் - மக்கள் கடும் எதிர்ப்பு
Russo-Ukrainian War
Ukraine
NATO
Germany
By Pakirathan
அமெரிக்க இராணுவத்தினர் ஜேர்மனியை விட்டு வெளியேற வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ரஷ்ய - உக்ரைன் இடையிலான யுத்தத்திற்காக நேட்டோ படையினர் ஜேர்மனியின் ரம்ஸ்டெயின் விமானப்படைதளத்தில் இருந்து வியூகங்களை வகுத்து அங்கிருந்து ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கி வருகின்றனர்.
இதற்கு ஜேர்மனியர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், வீதியில் திரண்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜேர்மனிய மக்கள்
உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி யுத்தத்தை நீட்டிக்காமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டு யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருமாறு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கேட்டுகொண்டுள்ளனர்.
